உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன்

என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன்

ராதா பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் மதன் குமார் தயாரிக்கும் படம் ஐபிஎல்(இந்தியன் பீனல் லா) கருணாநிதி இயக்குகிறார். டி.டி.எப். வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, 'ஆடுகளம்' நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். இம்மாதம் 28ம் தேதி உலகம் வெளிவருகிறது.

இதன் பாடல் வெளியீட்டு விழாவில் டி.டி.எப். வாசன் பேசியதாவது: இது என்னுடைய முதல் படம். நிச்சயமாக நிறைய தவறுகளை செய்திருப்பேன். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வெளியிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் என்னுடைய குறைகளை நான் திருத்திக் கொள்கிறேன்.

நான் கூச்ச சுபாவம் உள்ள பையன், இதை சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் சக நடிகையான குஷிதா முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அதிலும் குறிப்பாக முத்த காட்சியில் சவுகரியமான பங்களிப்பை அளித்தார். சமூகத்தில் எவ்வளவு அநியாயங்கள் நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு சொல்லி இருக்கிறோம். செய்தித்தாள்களில் இது போன்ற சம்பவங்களை பார்வையிடுகிறோம், எளிதாக கடந்து சென்று விடுகிறோம். அந்த செய்திக்கு பின்னால் எந்த அளவு உண்மை இருக்கிறது. எந்த அளவிற்கு அரசியல் பலமும், பண பலமும் மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த படம் எடுத்துச் சொல்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !