உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்!

ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்!


கடந்த 2010ம் ஆண்டு 'காதல் சொல்ல வந்தேன்' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை மேக்னா ராஜ். அதன் பிறகு 'உயர்திரு 420, நந்தா நந்திதா' போன்ற படங்களில் நடித்தார். அதையடுத்து தமிழில் படங்கள் இல்லாத நிலையில் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், நடிகர் அர்ஜுனின் சகோதரி மகன் சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மேக்னாராஜ். ஆனால் இவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தபோது மாரடைப்பால் சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்தார். தற்போது மேக்னா ராஜ்க்கு, ராயன் ராஜ் சார்ஜா என்ற மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் மேக்னா ராஜ், தற்போது தமிழில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் 'ஜெயிலர் -2' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் அவர் ஒரு முக்கியமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஜெயிலர்- 2வில் சிவராஜ்குமார் என்ற கன்னட நடிகர் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிலையில், தற்போது மேக்னாராஜும் இணைந்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !