பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா?
டி.டி.பாலசந்திரன் இயக்கும் 'லெனின் பாண்டியன்' படத்தின் பாட்டியாக நடிக்கிறார் ரோஜா. ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர், 'காவலன்' படத்தில் ஹீரோயின் அசின் அம்மாவாக நடித்தார். பின்னர், அரசியலில் தீவிரம் காண்பித்து, அமைச்சர் ஆனார். இப்போது இந்த படத்தில் பாட்டியாக நடித்துள்ளார் என த கவல். இது குறித்து விசாரித்தால், கிட்டத்தட்ட உண்மைதான். இதில் முக்கியமான வயதான கேரக்டரில் இசையமைப்பாளர் கங்கை அமரன் வருகிறார். அவர் மனைவியாக ரோஜா நடிக்கிறார். அதை சஸ்பென்ஸ் ஆக வைத்து இருக்கிறார்கள்.
சிவாஜி பேரனும், ராம்குமார் மகனுமான தர்ஷன் போலீசாக வருகிறார். அவருக்கும் கங்கை அமரனுக்குமான உறவே படத்தின் கதை என்கிறார்கள். இன்னொரு தரப்போ, ரோஜாவும் படத்தில் இருக்கிறார். அவருக்கு வேறு கேரக்டர். 75 வயதான கங்கை அமரனுடன் நடித்து இருக்கிறார். ஆனால், அவருக்கு ஜோடியாக அல்ல என்கிறார்கள். எது உண்மை என்பது படம் வந்தால் தெரிந்துவிடும்.