உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல்

லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல்

மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான படம் லோகா சாப்டர் 1. டொமினிக் அருண் இயக்கத்தில் உருவான இந்த படம் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியானது. கள்ளியங்காட்டு நீலியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்த இந்த படம் பாக்ஸ் ஆபீசில் 300 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் முதல் ரூ.300 கோடி வசூல் சாதனை படமானது. கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் இப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் லோகா படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் தயாரிக்கப் போவதாக தெரிவித்துள்ள துல்கர் சல்மான், அதில் ஒரு பாகத்தில் கண்டிப்பாக என்னுடைய தந்தை மம்முட்டியும் நடிப்பார். அவருடன் நான் இணையப்போகும் முதல் படமாக அது இருக்கும். மேலும், லோகா படத்தின் முதல் பாகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த பாகங்களை கூடுதல் பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !