மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்
மதராஸி படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கி உள்ள பராசக்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 1960களில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்ட கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை அடுத்து தற்போது சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். கடந்த 2010-ல் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார் சிவகார்த்திகேயன். தற்போது அவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் தனது பிள்ளைகளின் பிறந்தநாள் கொண்டாடு புகைப்படங்களை இணையப்பக்கத்தில் பதிவிட்டு வரும் சிவகார்த்திகேயன், தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.