உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லாட்டரி சீட்டு பின்னணியில் 80களின் நடக்கும் கதை ‛ராபின்ஹுட்'

லாட்டரி சீட்டு பின்னணியில் 80களின் நடக்கும் கதை ‛ராபின்ஹுட்'

1980களில் பின்னணியில் உருவாகியுள்ள காமெடி படம் “ராபின்ஹுட்”. அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி படமாக “ராபின்ஹீட்” உருவாகி உள்ளது. இயக்குனர் எச். வினோத் இந்த பட டிரைலரை வெளியிட்டு, படக்குழுவை பாராட்டியுள்ளார்.

படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரமாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

1980 களில், கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்னைகளும் தான் இந்த படத்தின் மையம். நாம் மறந்து போன லாட்டரி சீட்டு காலத்தை, கிராமப்புற பின்னணியில் மீட்டெடுத்து , கலகலப்பான திரைக்கதையாக கொடுத்துள்ளேன் என்கிறார் இயக்குனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !