உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை

'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை

பேஷன் ஸ்டூடியோ மற்றும் கோல்ட் மைன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'மை டியர் சிஸ்டர்' 'என்னங்க சார் உங்க சட்டம்' படத்தை இயக்கிய இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்குகிறார். அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண்பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். நிவாஸ் பிரசன்னா இசை அமைக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் பிரபு ஜெயராம் கூறும்போது, 'பாசமலர்' படத்தில் ஆரம்பித்து 1990களில் வெளியான 'கிழக்கு சீமையிலே', பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'வேதாளம்' எனப் பல படங்கள் அண்ணன்- தங்கை பாசத்தை பல தலைமுறைகளாக பேசி வருகிறது. அந்த வகையில், 'மை டியர் சிஸ்டர்' உணர்வுப்பூர்வமான கதையை வழங்குகிறது. ஆணாதிக்கவாதியான பச்சை கிருஷ்ணனுக்கும் பெண்ணியவாதியான அவனது அக்கா நிர்மலா தேவிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள்தான் இந்தக் கதை. அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸின் ஜாலியான பல தருணங்களை கொண்டே உருவாக்கினோம். திரையிலும் இவர்களது காம்பினேஷன் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !