மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி!
ADDED : 7 hours ago
நடிகர் தனுஷ் தற்போது 'போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவரது 54வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் உருவாகிறது. இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி, பூஜா ஹெக்டே போன்ற நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவியது தொடர்ந்து தற்போது இந்த படத்தில் சாய் பல்லவி நடிக்க வைக்க ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள். சாய் பல்லவி ஏற்கனவே தனுஷூடன் இணைந்து 'மாரி 2' மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என இருவருடனும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.