விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு
விஷால் இயக்கி, நடிக்கும் படம் 'மகுடம்'. துஷாரா விஜயன் ஹீரோயின். இந்த படம் குறித்து படக்குழு கூறியதாவது: 17நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ் படப்பிடிப்புடன் பிரம்மாண்டமாக நிறைவடைந்துள்ளது. மகுடம் கிளைமாக்சுக்காக கடந்த 17 நாட்கள் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேரம் நடைபெற்ற அதிரடியான கிளைமாக்ஸ் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.
சண்டை காட்சிகளுக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பில், நடிகர், நடிகைகள், நூற்றுக்கணக்கான ஸ்டண்ட், நடன கலைஞர்கள், கணினி கிராபிக்ஸ் வல்லுனர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நிறைந்த இப்படத்தின் காட்சி பிரமாண்டமாகவும், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்த கிளைமாக்ஸ், காட்சியமைப்பின் வலிமையான, உணர்ச்சியின் ஆழம், அதிரடி காட்சிகளின் எழுச்சி ஆகியவற்றை இணைத்து, படம் முழுவதும் ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்கியிருக்கிறோம்.
நடிகர் விஷால் இயக்குநராகும் முதல் முயற்சியான மகுடம், ஒரு சாதாரணப்படம் அல்ல, படைப்பை நேசிக்கும் ஒருவரின் உள்ளங்கனிந்த பயணம். நடிப்பு மற்றும் இயக்கம் ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, ஒரு புதிய அனுபவத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
பிரபல ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் அசார் ஆகியோர்கள் நிஜத்தன்மை நிரம்பிய, அதிரடி காட்சிகளை வடிவமைத்தும், படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளார்கள். “ஒவ்வொரு நாளும் கடின உழைப்பு, பொறுமை, ஆர்வம், தளராத உறுதி ஆகியவற்றின் கலவையாக இருந்தது, இப்படத்தின் மையக் கருத்தான வீரமும் உணர்ச்சியும் இந்த படப்பிடிப்பில் முழுமையாகப் பிரதிபலிக்கும்.
“சூப்பர் குட் பிலிம்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் மகுடம், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2026ல் படம் ரிலீஸ் ஆகிறது.