உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள்

ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள்


சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து 'ஜோ, கோழிப்பண்ணை' படங்களுக்கு பிறகு தயாரிக்கும் 3வது படத்தில் கோழிப்பண்ணை படத்தில் நடித்த ஏகன் நடிக்கிறார். 'ஆஹா கல்யாணம்' படத்தை இயக்கிய யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார்.

'கோர்ட்: ஸ்டேட் ஸ் எ நோபடி' தெலுங்கு படங்களில் நடித்த ஸ்ரீதேவி இந்தப் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். 'புரூஸ் லீ பிஜி' படத்தில் அறிமுகமாகி, 'மின்னல் முரளி', 'தீப்பொறி பென்னி' மற்றும் 'சேஷம் மைக்கேல் பாத்திமா' படங்களில் நடித்த பெமினா ஜார்ஜ் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !