வாசகர்கள் கருத்துகள் (1)
You are indeed an MFB.
நடிகர் பிரித்விராஜ் சில வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக எம்புரான் படத்தை இயக்கினார். கடந்த மார்ச் மாதம் வெளியான அந்த படம் கலவையான விமர்சனங்களுக்கு ஆளாகி முதல் பாகத்தின் வெற்றியை தொட தவறியது. அதேசமயம் 200 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியமும் படுத்தியது. இந்த நிலையில் பிரித்விராஜ் நடிப்பில் விலாயத் புத்தா என்கிற திரைப்படம் வரும் நவம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போது எம்பிரான் படம் குறித்தும் மனம் திறந்து பேசினார் பிரித்விராஜ்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் ரசிகர்களை பொழுதுபோக்க செய்ய வேண்டும் என்று தான் அந்த படத்தை உருவாக்கினேன். ஆனால் அதற்கு நான் எதிர்பாராத வகையில் நிறைய குறுக்கீடுகள் வந்தன. சில நான் எதிர்பார்த்ததை போல பொருந்தினாலும் பல விஷயங்கள் நான் யூகித்திராத வகையில் இருந்தது. ஒரு முறை ஒரு படத்தை உருவாக்கி திரையில் வெளியிட்டு விட்டால் ரசிகர்கள் அது குறித்த கருத்து வெளிப்படையாக தெரிவித்து விட்டால் அதோடு விட்டு விட வேண்டும். பிறகு அதற்கான காரண காரியங்களை பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள் என்றால் அது எனக்கு வெற்றி. அப்படி இல்லை என்றால் ஒரு இயக்குனராக நிச்சயம் எனக்கு அது தோல்விதான். அதை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அடுத்த படத்தில் நான் இன்னும் சிறப்பாக கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
You are indeed an MFB.