உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி

50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி


தமிழில் 'சகலகலா வல்லவன்' படத்தில் கமலுக்கு தங்கையாக 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் ரஜினிகாந்த் மகளாக கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை துளசி. தற்போது சினிமாவில் தனது 50 வருடத்திற்கு மேலான திரை உலக பயணத்தில் இருந்து ஓய்வு பெற போவதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் துளசி. (பின்னர் என்ன காரணமோ தெரியவில்லை. அந்த பதிவை நீக்கிவிட்டார்)

மூன்று மாத குழந்தையாக இருக்கும்போது 1967ல் தெலுங்கில் 'பார்யா' என்கிற படத்தில் நடித்த இவர், 1973ல் பாலச்சந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக, அதன் பிறகு குழந்தை நட்சத்திரமாகவே சில படங்களில் நடித்த இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் போஜ்பூரி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

பெரும்பாலும் கன்னட படங்களிலேயே கவனம் செலுத்தி நடித்து வந்த இவர், சமீப வருடங்களாக தமிழிலும் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'ஆரோமலே' படத்தில் கூட நாயகனின் அம்மாவாக நடித்திருந்தார். இந்த நிலையில் தான், வரும் டிச.,31 திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பதிவிட்டிருந்தார். சாய்பாபாவின் தீவிர பக்தையான துளசி, வரும் நாட்களில் சாய்பாபாவை வழிபாடு செய்து மீதி நாட்களை நிம்மதியாக கழிக்க விரும்புவதாக இன்னொரு பதிவில் வெளியிட்டுள்ளார் துளசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !