உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா?

'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா?


விகர்ணன் அசோக் இயக்கத்தில், கவின், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்க்' படம் நாளை நவம்பர் 21ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது பேசிய ஆண்ட்ரியா, 'வட சென்னை' படத்திற்குப் பிறகு தனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்று குறைபட்டுக் கொண்டார்.

2018ம் ஆண்டு 'வட சென்னை' படத்திற்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களில் ஆண்ட்ரியா, ஐந்து படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 'மாஸ்க்' படத்தை ஆண்ட்ரியாவும் இணைந்து தயாரித்துள்ளார். இப்படம் தனக்கு ஒரு திருப்புமுனையைத் தரும் என்ற நம்பிக்கையில்தான் அவர் இந்தப் படத்தின் இணை தயாரிப்பில் இணைந்தார் என்கிறார்கள்.

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய பலரும் 'மாஸ்க்' படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் 'வட சென்னை' சந்திரா கதாபாத்திரத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். மீண்டும் ஒரு பாராட்டுடன் 'மாஸ்க்' படத்தின் மூலம் ஆண்ட்ரியா வரவேற்பைப் பெறுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !