உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம்

பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம்


திரைப்படத்துறைக்கு வரும் நடிகைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. இந்த படங்களுக்கு முன்னோடியாக இருந்தது 'கதாநாயகி'.

நடிப்பு ஆசையால் வீட்டை விட்டு வெளியேறி ஒரு நாடக குழுவில் சேரும் பத்மினி; அங்கு சந்திக்கும் பிரச்சினைகள்தான் படம். நாடக சபா தலைவராக, பத்மினியை காதலிப்பவராக டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்தார், தோழியாக எம்.என்.ராஜம் நடித்தார்.
இவர்கள் தவிர கே.ஏ. தங்கவேலு, கே.மாலதி, டி.கே. ராமச்சந்திரன், கே.எஸ். அங்கமுத்து, ஏ. கருணாநிதி, பி.எஸ். ஞானம், பி.டி.சம்பந்தம், கே.ஆர். ஜெயகௌரி, கே.கே. சவுந்தர், எம்.ஆர். சந்தானம், வி.பி.எஸ். மணி, டி.கே. கல்யாணம், ஜெயசக்திவேல், எஸ்.ராமராவ், எம்.ஆர். சுந்தரம், ஆர்.எம். சேதுபதி, ராஜசேகரன், ராஜு நாகரத்தினம் ஆகியோர் நடித்தனர்.

கே.ராம்நாத் இயக்கினார். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். இது ஒரு நடிகையை பற்றிய கதையாக இருந்தாலும், காமெடி படமாகவே உருவாக்கப்பட்டிருந்தது. பாடல்கள், நடனங்கள் நிறைய இருந்தும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. மார்ட்ன் தியேட்டர்ஸ் படத்தை தயாரித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !