சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம்
ADDED : 47 minutes ago
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழாவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். விழாவின் 2வது நாளான நேற்று இந்தியாவில் பல்வேறு மொழிகளில் தயாரான ஆவண படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்டு அது தொடர்பான ஆய்வறிக்கைகளும், சினிமா வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான ஆய்வு கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த விழாவில் 'அமரன்' தொடக்க விழா படமாக திரையிடப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன், மகேந்திரன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டு பார்வையாளர்களுடன் படத்தை பார்த்தனர். 'அமரன்' சர்வதேச போட்டிப் பிரிவில் கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.