ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது
ADDED : 40 minutes ago
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வந்த படம் ஆர்யன். பிரவீன் என்பவர் இயக்கிய இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன், மானசா சவுத்ரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். ஜிப்ரான் இசையமைத்தார். விஷ்ணு விஷாலே தயாரித்திருந்தார். மேலும், கிரைம் திரில்லர் கதையில் உருவான இந்த படம் வருகிற 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்கள் .