இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு
ADDED : 5 minutes ago
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 25வது படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோவை தொடர்ந்து அடி அழகே என்ற பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், ரத்னமாலா என்ற இரண்டாவது பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது. மேலும், பராசக்தி படம் திரைக்கு வர இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில் அதை நினைவுபடுத்தும் புதிய போஸ்டர் ஒன்றை இப்படத்தை தயாரித்துள்ள டான் பிக்சர்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பராசக்தி படம் பொங்கலை முன்னிட்டு ஜன., 14ல் ரிலீஸாகிறது.