நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி
ADDED : 7 minutes ago
தெலுங்கில் வெளியான 'உப்பன்னா' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கிர்த்தி ஷெட்டி. தற்போது தமிழில் வா வாத்தியார், எல்.ஐ.கே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, நான் கார்த்தியின் தீவிரமான ரசிகை. அவரின் 'பையா' படத்தை 100 முறைக்கு மேல் பார்த்து ரசிச்சிருக்கேன். 'தி வாரியர்' படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற போது பக்கத்து அரங்கில் தான் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பும் நடந்தது. கார்த்தியை பார்க்க லிங்குசாமி என்னை அழைத்து போகிறேன் என்றார். ஆனால், இடைவிடாமல் நடந்த படப்பிடிப்பினால் சந்திக்கவில்லை. பின்னர் நதியா மேடம், கார்த்தி உடன் போனில் பேசும்போது என்னையும் அவருடன் பேச வைத்தார். அப்போது அவரிடம் 'பையா' படத்தை நூறு முறை பார்த்ததை கூறினேன். என தெரிவித்தார்.