உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா'

ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா'

கன்னட தயாரிப்பு நிறுவனமான ஹம்பாலே பிலிம்ஸ் மற்றும் க்லீம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அஷ்வின் குமார் இயக்கத்தில் ஜூலை 25ல் வெளியான அனிமேஷன் திரைப்படம் 'மகா அவதார் நரசிம்மா'. இப்படம் உலக அளவில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

2026ல் நடைபெற உள்ள 98வது ஆஸ்கர் விருதுக்கான அனிமேஷன் படங்களுக்கான போட்டியில் 'மகா அவதார் நரசிம்மா' படமும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து ஆஸ்கர் விருதுக் குழு அறிவித்துள்ள 35 படங்களின் பட்டியலில் இந்தப் படமும் உள்ளது. ஆஸ்கர் விருதுக் குழுவின் உறுப்பினர்கள் அந்தப் படங்களிலிருந்து இறுதியாக 5 படங்களைத் தேர்வு செய்வார்கள். அந்த அறிவிப்பு ஜனவரி மாதம் 22ம் தேதி வெளியாகும்.

இறுதிப் பட்டியலில் 'மகா அவதார் நரசிம்மா'படம் இடம் பெற்றால் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் போட்டிக்காகச் சென்ற முதல் அனிமேஷன் திரைப்படம் என்ற பெருமையைப் பெறும்.

சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில், ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் நீரஜ் காய்வான் இயக்கிய 'ஹோம்பவுண்ட்' ஹிந்தித் திரைப்படம் அனுப்பப்படுகிறது. இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். செப்டம்பர் 26ம் தேதி இப்படம் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !