சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம்
ADDED : 10 minutes ago
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் 'லாக் டவுன்'. அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், என்.ஆர்.ரகுநந்தன் - சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
இந்தப் படம் கோவாவில் நடைபெறும் 56வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கொரோனா லாக் டவுன் காலத்தில் நடந்த சம்பவங்களின் பின்னணியில் இந்த படம் தயாராகி உள்ளது. வருகிற டிசம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.