‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி
ADDED : 3 minutes ago
கடந்த 2014ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, வித்யூத் ஜம்வல், சமந்தா ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'அஞ்சான்'. இந்த படம் வெளியாகுவதற்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. வெளியான பிறகு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்து அது இந்த படத்தின் வெற்றியையும் பாதித்தது. தற்போது அஞ்சான் திரைப்படம் வருகின்ற நவம்பர் 28ம் தேதியன்று ரீ ரிலீஸ் ஆகிறது. இதற்காக இந்த படத்தை மீண்டும் படத்தொகுப்பு செய்து நீளத்தை குறைத்துள்ளனர்.
லிங்குசாமி கூறுகையில், அஞ்சான் படத்தில் சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுவதுமாக நீக்கியுள்ளோம். அஞ்சான் ரீ ரிலீஸ் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றால் அஞ்சான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.