மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி?
ADDED : 16 minutes ago
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் அல்லாமல் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பாலிவுட் நடிகை வித்யா பாலன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இப்போது நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி, ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.