ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ்
ADDED : 3 minutes ago
நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் நடித்துள்ள 'ரீவால்வர் ரீட்டா' படம் வருகின்ற நவம்பர் 28ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து வலைதளங்களில் பேட்டி அளித்து வருகிறார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, நமது திரைப்படத் துறை ஆண் ஆதிக்கம் உள்ள துறை என்பது கசப்பான உண்மை. பார்வையாளர்களின் பார்வையும் முக்கியம். உதாரணமாக, உங்கள் அபிமான ஹீரோ படமும், உங்கள் அபிமான ஹிரோயின் படமும் ஒரே நாளில் வெளியானால், பார்வையாளர்கள் நிச்சயமாக ஹீரோ படத்தை தான் பார்ப்பார்கள். படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஹீரோயின் சார்ந்த படங்களைப் பார்க்க பார்வையாளர்கள்வருகிறார்கள். எங்களுக்கு ஓபனிங் இல்லை என கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக பேசியுள்ளார்.