ஜீவாவிற்கு திருப்புமுனையாக அமைந்த 'தலைவர் தம்பி தலைமையில்'
ADDED : 36 minutes ago
'பாலிமி' பட இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இதில் தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர்.
இப்படம் விமர்சகர்கள் மற்றும் வெகுஜன மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த பொங்கல் பண்டிகைக்கு குடும்பங்களோடு திரையரங்கம் சென்று பார்க்கும் படமாகவும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் இப்படம் முதல் இரண்டு நாட்களில் தமிழக அளவில் ரூ. 5.90 கோடி அளவில் வசூலித்துள்ளது என விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். கடந்த 10 வருடங்களில் ஜீவா கதாநாயகனாக நடித்து திரைக்கு வந்த படங்களில் அதிகளவில் ஓப்பனிங் கலெக்ஷன் படமாக தலைவர் தம்பி தலைமையில் அமைந்துள்ளது. இதனால் ஜீவா தரப்பும் மகிழ்ச்சியாக உள்ளனர்.