உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறாரா தமன்னா?

நானி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடுகிறாரா தமன்னா?


'தசரா' பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் நானி, 'தி பாரடைஸ்' படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான மோகன் பாபு நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கயாடு லோகர் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடல் காட்சி இடம்பெறுகிறது. இந்த பாடல் காட்சியில் நடனமாடுவதற்காக நடிகை தமன்னா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !