'லீடர்' ஆக மாறும் லெஜண்ட் சரவணன் !
'லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் தொழிலதிபர் அருள் சரவணன். முதல் படத்தில் அவர் சந்தித்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு இரண்டாவது படத்தில் நடித்துள்ளார்.
'கொடி, கருடன்' போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் அவரது இரண்டாவது படமாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.40 கோடி பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே லெஜண்ட் சரவணன் இந்த படத்தில் ராணுவ காமென்டர் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியானது.
தற்போது இந்த படத்திற்கு 'லீடர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை ஏப்ரல் 3ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக சொல்கின்றனர்.