உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்!

உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்!


இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவன தயாரிப்பில் ரத்ன குமார் இயக்கி வரும் '29' படத்தில் நாயகனாக 'ரெட்ரோ' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விது நடித்து வருகிறார். இவர் கார்த்திக் சுப்பராஜின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கதாநாயகனாக நடித்துள்ள முதல் படமே திரைக்கு வராத நிலையில் கார்த்திக் சுப்பராஜ், விதுவை கதாநாயகனாக வைத்து இரண்டாவது படத்தை தயாரிக்கிறார். 'ஈட்டி' ரவி அரசுவின் உதவி இயக்குனர் ஹரி என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் கார்த்திக் சுப்பராஜ், விதுவை கதாநாயகனாக வைத்து மூன்றாவது படத்தையும் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை 'கூழாங்கல், கொட்டுக்காளி' ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !