மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது!
ADDED : 13 hours ago
கடந்த 2024 ஆண்டில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான படம் 'மகாராஜா'. இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு நிதிலன், நயன்தாராவை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால், ஒரு சில காரணங்களால் நயன்தாரா படம் கை நழுவி போனதால் தற்போது நிதிலன், மகாராஜா படத்தின் இரண்டாம் பாகத்திற்காக திரைக்கதை பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
முன் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றதும் விஜய் சேதுபதி கால்ஷீட் தருவதாக உறுதியளித்துள்ளார் என நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.