மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கடந்த 2017ம் ஆண்டில் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து, இயக்கி, நடித்து வெளியான படம் 'மீசைய முறுக்கு'. இந்த படத்தின் மூலம் தான் ஆதி இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 'மீசைய முறுக்கு' ஹிப் ஹாப் ஆதி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை மையப்படுத்தி படமாக உருவாக்கி வெற்றி பெற்றவர்.
சமீபத்தில் மீசைய முறுக்கு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. முதல் பாகத்தை தயாரித்த சுந்தர். சியின் அவ்னி மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதியும் இந்த பாகத்தை தயாரிக்கிறார்.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று மலேசியாவில் நடைபெற்ற தனது மியூசிக் கான்சர்ட் நிகழ்ச்சியில் அறிவித்தார் ஹிப் ஹாப் ஆதி. கூடுதலாக, இந்த படத்தில் பிரபல யூடியூபர் மற்றும் 'டிராகன்' படத்தின் மூலம் பிரபலமான குட்டி டிராகன் ஹர்ஷத் கான், ஆதிக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதையும் தெரிவித்துள்ளார்.