'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...!
நவம்பர் மாத இறுதியிலும் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த பல்வேறு திரைப்படங்கள் இந்த வார ஓடிடி ரிலீசாக வெளியாகவுள்ளது. இதில் ஆண் பாவம் பொல்லாதது' உள்ளிட்ட பல்வேறு படங்களில் வரிசை கட்டி நிற்கிறது.
ஆண் பாவம் பொல்லாதது
நடிகர் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆண் பாவம் பொல்லாதது'. இந்த திரைப்படத்தைப் புதுமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆண்களின் முக்கியத்துவத்தைச் சொல்லும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நாளை(நவ.28ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
ஆர்யன்
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், வெளியான திரைப்படம் ஆர்யன்'. இந்த திரைப்படத்தைப் புதுமுக இயக்குநர் பிரவின் இயக்கி இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த திரைப்படம் நாளை(நவ.28ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ரேகை
க்ரைம் த்ரில்லர் நாவல் எழுதும் ராஜேஷ்குமாரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட வெப் தொடர்'ரேகை'. இந்த தொடரைத் தினகரன் எம் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் பாலா ஹாசன், பவித்ரா ஜனனி, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் நாளை(நவ.28ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Sasivadane
தெலுங்கில் வெளியாகியுள்ள திரைப்படம்'sasivadane'. காதல் ரொமான்டிக் திரைப்படமான இந்த படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் நாளை(28ம் தேதி) சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தி பெட் டிடெக்டிவ் (The Pet Detective)
மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம்'தி பெட் டிடெக்டிவ்(The Pet Detective). காமெடி மற்றும் த்ரில்லர் கதையம்சத்துடன் வெளியான இந்த திரைப்படம் நாளை(28ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மாஸ் ஜாதாரா (Mass Jathara)
தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம்'Mass Jathara(மாஸ் ஜாதாரா)'. ஆக்ஷன் திரைக்கதை களத்தில் வெளியான இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திரைப்படம் நாளை(28ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஜிங்கிள் பெல் ஹெய்ஸ்ட்
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜிங்கிள் பெல் ஹெய்ஸ்ட்' திரைப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஆங்கிலம்,தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.