சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு'
ADDED : 1 minutes ago
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வரையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் வியாபாரம் ஆகவில்லை என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி முடிவாகமால் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் மற்றும் சாட்லைட் உரிமையை ஜீ டிவியும் பெரிய தொகைக்கு கைபற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இப்படம் வருகின்ற ஜனவரி 23ம் தேதியன்று திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.