வாசகர்கள் கருத்துகள் (1)
Mohan ji - you go strong. You will win
மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்டு, ரக்ஷனா நடித்துள்ள படம் ‛திரெளபதி 2'. விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் இருந்து ‛என் கோனே' என்ற பாடலை சின்மயி பாடி உள்ளார். இந்த பாடல் வெளியாகி 10 லட்சம் பார்வைகளை நெருங்கி உள்ளது. இதனிடையே சாதிய படம் எடுக்கும் இயக்குனர் படத்தில் பாடுவதா என சின்மயிக்கு எதிர்ப்பு கிளம்ப உடனே மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் விவாதமாகி உள்ளது.
இயக்குனர் பேரரசு கூறுகையில், ‛‛சின்மயி வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கட்டும், அந்த பாட்டை நீக்கிவிட்டு வேறு ஒருவரை பாட வைக்கலாம். கொள்கையை விட பணமா முக்கியம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மோகன் ஜி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‛‛எதற்காக சின்மயி இப்படி ஒரு டுவீட் போட்டார் என தெரியவில்லை. பாடல் கம்போசிங் எல்லாமே நன்றாக நடந்தது. படக்குழுவான எங்களிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் என பிரச்னை என்று. எந்த சித்தாந்தத்தில் எங்களது படக்குழு வேறுபட்டு உள்ளோம். இதுபற்றி சின்மயி விளக்கம் அளித்தால் நல்லது, அல்லது அந்த பதிவை நீக்க வேண்டும். ஏனென்றால் அது படத்தின் வியாபாரத்தை எந்த விதத்திலும் பாதித்துவிடக் கூடாது'' என்றார்.
Mohan ji - you go strong. You will win