உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன்

பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன்


அந்தக் காலத்தில் 'கவர்ச்சி வில்லன்' என்ற ஒரு பிரிவு இருந்தது. பி.எஸ்.வீரப்பா, நம்பியார் உள்ளிட்ட சிலர் அப்படிப்பட்டவர்கள். அதாவது ஹீரோவுக்கு இணையான அழகுடன் இருப்பவர்களை அப்படி அழைத்தார்கள். அந்த வகையில் கவர்ச்சி வில்லனாக இருந்தவர் எஸ்.ஏ.நடராஜன்.

வெண்கலக்குரல். வசனம் பேசும் தனிப்பாணி. சிரித்துக் கொண்டே வசனம் பேசுவது இவரது தனிச்சிறப்பு. எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய 'மந்திரிகுமாரி' படத்தில் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்து புகழ்பெற்றார். சிவாஜிகணேசனுடன் 'மனோகரா' படத்திலும் கருணாநிதியின் வசனத்தை இவர் பேசிய விதமும் பேசப்பட்டது. கைதி, ரோகினி, முல்லை வனம், கோகிலவாணி, அமுதவல்லி, பாண்டித்தேவன் போன்றவை இவர் நடித்த முக்கிய படங்கள்.

வில்லனாக உச்சத்தில் இருந்தபோது இவருக்கு திடீரென படம் இயக்கும் ஆசை வந்தது.”நல்ல தங்கை” என்ற படத்தை இவரே தயாரித்து இயக்கினார். முக்கிய வேடத்திலும் நடித்தார். நம்பியார்தான் ஹீரோ. இப்படம் 1955ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. இதனால் மேலும் ஒரு சில படங்களை இவர் தயாரித்து அவை வெற்றி பெறாததால் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி ஒரு கட்டத்தில் திரையுலகை விட்டே விலகினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !