பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ
சினிமா மறந்து விட்ட முக்கிய நடிகைகளில் ஒருவர் பாக்யஸ்ரீ. கேரளாவைச் சேர்ந்த பாக்யலட்சுமி பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சினிமா நடிப்பில் ஆர்வம் கொண்டு மலையாத்தில் சில படங்களில் நடித்த பாக்யலட்சுமி, பெயரை பாக்யஸ்ரீ என்று மாற்றி தமிழில் 'தேவியின் திருவிளையாடல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு 'வளையல் சத்தம்' என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.
மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன் நடித்தவர் தமிழில் 'கொடி பறக்குது' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். ஜெயின் ஜெயபால், தாயா தாரமா, ஆளை பார்த்து மாலை மாத்து, சின்ன வாத்தியார், சின்ன கண்ணம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடித்த 'ஒரே ரத்தம்' படத்தில் அவருடன் நடித்தார்.
பின்னர் குஜராத் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். பின்னர் மீண்டும் சென்னை திரும்பி சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.