வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர்
ADDED : 49 days ago
பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூரும், கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யரும், காதலிப்பதாக காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இருவரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது. நட்சத்திர ஓட்டலில் இருவரும் ரகசியமாக சந்தித்து கொண்ட படங்களும் வெளியானது.
இந்த தகவல்களுக்கு தனது இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ள மிருணாள் தாக்கூர் ''பேசுவோர் பேசட்டும், சிரிப்போர் சிரிக்கட்டும். நாமும் சிரிப்போம். வதந்திகள் என்பது இலவச விளம்பரம் போல. எனக்கு இலவசம் என்றால் ரொம்ப பிடிக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.