திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்
ADDED : 5 minutes ago
சென்னை: வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த சினிமா தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று (டிச.,04) காலமானார். அவருக்கு வயது 86.
திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனத்தின் இயக்குநர் ஏவிஎம் சரவணன்,86. இவர் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவர் இன்று வடபழநியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். தற்போது ஏவிஎம் ஸ்டுடியோவில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இவரது உடல் இன்று மாலை 3 மணிக்கு மேல் ஏவிஎம் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏவிஎம் சரவணன் நேற்றுதான் தனது 85வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.