உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா

முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா

தெலுங்கு நடிகரான நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலா இருவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் இது. அவரும் நடிகை சமந்தாவும் சில வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டு 2021ல் பிரிந்தார்கள்.

அதன்பின் நாக சைதன்யா, சோபிதாவைக் காதலிப்பதாக கிசுகிசு வெளியானது. இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்குச் சென்ற புகைப்படங்கள் அவர்களது காதலை உறுதிப்படுத்துவதாக இருந்தது. அதன்பின் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களது திருமண வீடியோவை அவர்கள் வெளியிடாமலேயே இருந்தார்கள்.

இந்நிலையில் நேற்று அவர்களது முதலாம் ஆண்டு திருமண நாளில் அந்த வீடியோவை சோபிதா வெளியிட்டு, “காற்று எப்போதும் வீட்டை நோக்கி வீசுகிறது. டெக்கானில் திரும்பி, கணவன் என்று அழைக்கும் ஆணுடன் சூரியனைச் சுற்றி ஒரு பிரம்மிப்பான பயணம் முடிந்து, நான் புதிதாக உணர்கிறேன். நெருப்பால் தூய்மைப்படுத்தப்பட்டது போல. திருமதியாக ஒரு வருடம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு நாகசைதன்யா, “உன் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பது ஆசீர்வாதம் என் அன்பே, இனிய திருமண நாள் வாழ்த்துகள்,” என்று கமெண்ட் செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நாகசைதன்யாவின் முன்னாள் மனைவியான சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமொருவைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு வருடமாக வெளியிடாத திருமண வீடியோவை, சோபிதா இப்போது ஏன் வெளியிட வேண்டும் என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !