உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ?

'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ?

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் 'சிக்மா' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனது மகனின் படத்திற்காக நடிகர் விஜய் இதுவரை ஒரு வாழ்த்து கூட சொல்லாதது திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கடைசி கட்டத்தில் உள்ளது. இப்படத்திற்காக ஒரு சிறப்புப் பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 'மெட்ராஸ்' படத்தின் கதாநாயகி கேத்தரின் தெரேசா அப்பாடலுக்கு சிறப்பு நடனமாடி உள்ளாராம்.

அப்பாடலில் படத்தின் இயக்குனரான ஜேசன் சஞ்சய்யும் இணைந்து நடனமாடியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முழு பாடலுக்கும் ஆடியுள்ளாரா, அல்லது சிறப்புத் தோற்றத்தில் கொஞ்ச நேரமே ஆடியுள்ளாரா என்பது இனிமேல்தான் தெரியும்.

விஜய்யின் மகன் ஜேசன் அப்பாவைப் போல நடிகராகத்தான் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இயக்குனராக அறிமுகமாவது ஆச்சரியம்தான். இப்படத்திற்குப் பிறகு அவர் முழுநேர நடிகராக மாறினாலும் மாறலாம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !