உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்'

100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்'

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், தனுஷ், கிர்த்தி சனோன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தித் திரைப்படம் 'தேரே இஷ்க் மெய்ன்'. இப்படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியானது.

ஹிந்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது 118 கோடியை மொத்த வசூலாகப் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனுஷ் ஹிந்தியில் அறிமுகமான 'ராஞ்சனா' படமும் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றி பெற்றது. அதன்பிறகு இந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. தனுஷ் நடித்து இந்த வருடம் தெலுங்கு, தமிழில் வெளிவந்த 'குபேரா' படமும் 100 கோடி வசூலைக் கடந்தது. தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்த தமிழ்ப் படமான 'இட்லி கடை' 50 கோடி வசூலைக் கடந்ததாகச் சொல்லப்படுகிறது.

'தேரே இஷ்க் மெய்ன்' வசூல் மூலம் ஹிந்தியில் மீண்டும் தடம் பதித்துள்ளார் தனுஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !