உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா

ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தெலுங்கு மற்றும ஹிந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர். சமீப வருடங்களாக படம் இயக்குவதில் ஒரு தேக்க நிலை இருந்தாலும் எப்போதுமே பரபரப்பு செய்திகளில் இடம் பிடித்து வருபவர். இந்த நிலையில் முதன்முறையாக நடிகராக அதுவும் ஒரு படத்தில் ஹீரோவாகவே நடித்து வருகிறார் ராம்கோபால் வர்மா. இந்த படத்திற்கு ஷோமேன் என்கிற டைட்டிலும் மேட் மான்ஸ்டர் என்கிற டேக்லைனும் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் சுமன் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் நூதன் என்பவர் இயக்குகிறார். ராம்கோபால் வர்மா இயக்கிய பல படங்களை தயாரித்த ராம சத்திய நாராயணா இதை தயாரிக்கிறார் .

ராம்கோபால் வர்மா எப்படி இந்த படத்திற்குள் ஹீரோவாக வந்தார் என்பது குறித்து தயாரிப்பாளர் ராம சக்திய நாராயண கூறும்போது, “நான் புதிய படம் எடுப்பதற்காக சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களிடம் தேதி கேட்டு பார்த்தேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. அதனால் என்னுடைய 'கடவுளான' ராம்கோபால் வர்மாவையே ஹீரோவாக்க முடிவு செய்தேன். ராம்கோபால் வர்மாவுக்கு 50 கோடி சம்பளம் கொடுக்கலாம் என்கிற அளவுக்கு வொர்த் ஆனவர். ஆனால் இப்போது வரை ஒரு பைசா சம்பளம் கூட வாங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் முடியட்டும் அப்புறம் வாங்கிக் கொள்கிறேன் என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டார்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !