உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்!

‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்!


ஹிந்தியில் ‛உரி' பட இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள படம் 'தூரான்தர்'. இதில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக சாரா அர்ஜூன் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சய் தத், மாதவன், அர்ஜூன் ராம்பால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்திய அரசு சார்பில் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க சென்ற ஒருவரின் உண்மை கதையை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். நேற்று இத்திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படம் முதல் நாள் இந்திய அளவில் ரூ.28.60 கோடியும், 2வது நாளில் ரூ.33.10 கோடியும் என மொத்தம் ரூ.61.70 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !