டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா
ADDED : 1 minutes ago
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், ராணா டகுபதி, பாக்கியஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் காந்தா. பிரீயட் படமாக வெளியான இப்படம் எதிர்பார்த்தபடி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறாமல் போனது. படம் வெளியாகி நான்கு வாரங்களை கடக்கும் சூழலில் வருகிற டிசம்பர் 12ம் தேதி இந்த படத்தை நெட் பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடுகிறார்கள். இப்படத்தை துல்கர் சல்மான், ராணா டகுபதி ஆகிய இருவரும் தயாரித்துள்ளார்கள்.