சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது
ADDED : 58 minutes ago
தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்துள்ள படம் மன சங்கர வரபிரசாத் காரு. சிரஞ்சீவியின் 157 வது படமான இப்படத்தில் கேத்தரின் தெரசாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வருகிற சங்கராந்தி தினத்தில் திரைக்கு வரும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மீசால பில்லா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அதையடுத்து தற்போது சசி ரேகா என்ற இரண்டாவது பாடலையும் வெளியிட்டுள்ளார்கள். சிரஞ்சீவி - நயன்தாரா இளமையான கெட்டப்பில் தோன்றும் இந்த காதல் பாடல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த பாடலில் சிரஞ்சீவி-நயன்தாராவின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட்டாகி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.