உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர்

தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர்

ஜூனியர் என்.டி.ஆருடன் தேவரா என்ற படத்தில் நடித்த ஜான்வி கபூர், தற்போது ராம் சரணுடன் பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நவம்பர் 7ம் தேதி தெலுங்கில் ராஷ்மிகா மந்தனா, தீட்சித் ஷெட்டி நடிப்பில் வெளியாகி, கடந்த டிசம்பர் 5ம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள தி கேர்ள் பிரண்ட் படத்தை பார்த்துள்ளார் ஜான்வி கபூர். அதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்மிகாவின் புகைப்படத்துடன் தி கேர்ள் ப்ரெண்ட் படத்தை கட்டாயமாக பாருங்கள் என்று ஒரு பதிவு போட்டுள்ளார். ஜான்வி கபூரின் இந்த பதிவு காரணமாக பாலிவுட் திரை உலகினர் மத்தியில் ராஷ்மிகாவின் தி கேர்ள் ப்ரண்ட் படம் கவனம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !