உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து

நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து

கடத்த 2017ல் கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கிட்டத்தட்ட 88 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து அதன் பிறகு ஜாமினில் வெளிவந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று (டிசம்பர் 8) தீர்ப்பு காலை தீர்ப்பு வழங்கப்பட்டது..

இந்த தீர்ப்பின்படி திலீப் உள்ளிட்ட நால்வர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கின் பிரதான குற்றவாளியான பல்சர் சுனில் உட்பட ஆறு பேர் மீது குற்றம் நிரூபணம் ஆகி உள்ளது.

இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைதான பிறகு அவரை மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின.. அதன்பிறகு திலீப் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். அதையடுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிகர் சங்க தலைவராக பொறுப்பு ஏற்ற போது மீண்டும் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்க்கும் முடிவை எடுத்தார். இதற்கும் எதிர்ப்புக் குரல் எழுந்ததால் நடிகர் திலீப் தனக்கு நடிகர் சங்கத்தில் தற்போது சேர விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பு குறித்து நடிகர் சங்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “சட்டம் நீதியின் பாதையில் செல்ல வேண்டும்.. நீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் அம்மா (மலையாளம் நடிகர் சங்கம்) எப்போதுமே மதிக்கிறது. என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !