உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி?

மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ' எல்.ஐ.கே' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்தப்படம் தீபாவளிக்கே வெளியாக வேண்டியது. அன்றைய தேதியில் ஹீரோ பிரதீப்ரங்கநாதனின் டியூட் படமும் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட, சில கட்ட பேச்சுவார்த்தைகளுக்குபின் டிசம்பர் 18ம் தேதிக்கு எல்ஐகே ரிலீஸ் தள்ளிப்போனது. ஒரே நேரத்தில், ஒரு ஹீரோவின் 2 படங்கள் ரிலீஸ் ஆனால், இரண்டுபேருக்கும் பிரச்னை என்பதால் இந்த முடிவு என்று எல்ஐகே படக்குழு அறிவித்தது. டியூட் பெரிய ஹிட் ஆனது.

இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் திரையுலகில் பலரும் இந்த படம் திரைக்கு வருமா என சந்தேகம் உள்ளது. ரிலீசுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் படக்குழு விளம்பர பணிகளை தொடங்கவில்லை. பட ரிலீசில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். அதேபோல் இன்னும் அனிரூத் இந்த படத்திற்கு பின்னனி இசை பணிகளை இன்னும் முடிக்கவில்லை என்கிறார்கள்.

மேலும், அவதார் 3ம் பாகமும் வெளியாகுவதால் வெளிநாடுகளில் போதுமான அளவிற்கு திரையரங்குகளில் கிடைக்காது என்கிற காரணத்தினால் இப்படத்தை டிசம்பர் 18ல் இருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !