100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் ஜப்பானில் வெளியானதை தொடர்ந்து அங்கே ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருக்கும் ரசிகர்கள் உருவாக தொடங்கி விட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ஜுப்ளி ஹில்ஸில் உள்ள ராம்சரணின் வீட்டில் ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஜப்பானிய ரசிகை ஒருவரும் கலந்து கொண்டார்.
அவர் ராம்சரணுக்காக தான் செய்து கொண்டு வந்த கைவினைப் பொருள்களை அவரிடம் பரிசாக கொடுத்ததோடு ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை தான் 100 முறை தொடர்ந்து பார்த்து ரசித்ததாக கண்கலங்க கூறினார். இன்னும் தன்னைப்போல பல பெண்கள் தினசரி தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தை ரசித்தார்கள் என்கிற தகவலையும் கூறிய அந்த ரசிகை, ராம்சரணின் கேம் சேஞ்சர் மற்றும் தற்போது அவர் நடித்து வரும் பெத்தி ஆகிய படங்களை ஜப்பானில் விரைவில் எதிர்பார்க்கிறோம் என்று தனது ஆசையையும் வெளிப்படுத்தினார்.