உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு

கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு


சேலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் இயக்குனர் சேரன் நான் கடன் பிரச்னையில் சிக்கி தவிப்பதால் படம் இயக்க முடியவில்லை என்று பேசி இருப்பது தற்போது வைரல் ஆகி உள்ளது. அவர் மேலும் பேசியிருப்பதாவது:

நான் யாரையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை. நான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வேன். என்னுடைய படத்தில் வில்லனே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் வில்லன்களை விரும்புவதில்லை. நான் வில்லனாகவும் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய வாழ்க்கை முறை.

எனக்கு வாழ்க்கையில் நிறையப் பிரச்னைகள் இருக்கிறது. கடன் நிறைய இருக்கிறது. படம் எடுக்க முடியவில்லை. படம் எடுக்க தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. கதை சொல்வதற்கு போனால் ஹீரோக்கள் கதை கேட்க மறுக்கிறார்கள். இந்த மாதிரி நிறையப் பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் நான் நிம்மதியாக தூங்குகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன்.

காரணம் என்னவென்றால் வாழ்க்கையை ஈசியாக எடுத்துக்கொண்டேன். எல்லாவற்றையும் கடக்கும் சக்தி நம்மிடம் தான் இருக்கிறது. எல்லோரையும் நேசியுங்கள். சிரித்த முகத்துடன் அன்பாக பேசுங்கள். எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடும். இவ்வாறு சேரன் பேசியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !