நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து
ADDED : 1 hours ago
பெங்களூரு ஹெப்பகோடியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த ஆண்டு போதை விருந்து நடந்தது. இதில் பிரபல தெலுங்கு நடிகை ஹேமா உள்பட 88 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் எம்.டி.எம்.ஏ மற்றும் கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நடிகை ஹேமா, தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் இருந்து நடிகை ஹேமாவை விடுவித்தது. அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.