உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை

படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கடந்த வருடம் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தற்போது பெல்லாரி சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிப்பில் ஏற்கனவே உருவாகி வந்த தி டெவில் திரைப்படம் இன்று (டிசம்பர் 11) வெளியாக இருக்கிறது. இதனையடுத்து சிறையில் இருக்கும் தர்ஷன் தனது மனைவியின் சோசியல் மீடியா பக்கம் மூலமாக தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, “இந்த செய்தியானது என் இதயத்தில் இருந்து எனது மனைவி விஜி மூலமாக உங்களுக்கு சுமந்து வரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் உங்களைப் பற்றியும் நீங்கள் காட்டும் அன்பு, அக்கறை, களைப்பில்லாத ஆதரவு, இந்த படத்திற்காக நீங்கள் கொடுத்த இடை நிற்காத புரமோஷன் அனைத்தும் குறித்து அவர் என்னிடம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார்.

உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று நினைத்து யாரும் கவலைப்பட வேண்டாம். எந்த ஒரு வதந்தியோ, எதிர்மறை செய்திகளோ உங்கள் இதயத்தை அசைத்துப் பார்ப்பதற்கு விட வேண்டாம். நீங்கள் தான் என்னுடைய பலம். என்னுடைய குடும்பம்.. இன்று அதற்கும் மேலே.. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !